பிரித்வி ஷா தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்!

Updated: Sat, Apr 13 2024 20:05 IST
பிரித்வி ஷா தொடர்ச்சியாக ரன்களை சேர்க்க வேண்டும் - மைக்கேல் கிளார்க்! (Image Source: Google)

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணியானது ஆயூஷ் பதோனியின் அரைசதம் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா தொடர்ந்து பெரிய ஸ்கோர்களை குவிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பிரித்வி ஷா தொடக்கம் கொடுப்பதன் காரணமாக அது டேவிட் வார்னர் மற்றும் அவரைத் தொடர்ந்து களமிறங்கும் ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் ஆகியோருக்கு தங்களது ஆட்டத்தை வெளிப்படுத்த உதவியாக இருக்கிறது.

அதிலும் நேற்றைய போட்டியில் பிரித்வி ஷா - ஜேக் ஃபிரெசர் இருவரும் சிறப்பாக விளையாடினர். அதிலும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்தனர். அதிலும் ஒருவர் பவுண்டரி அடித்தால், மற்றொருவர்  சிக்ஸர் அடித்து ஸ்கோரை உயர்த்தினர்.  எனவே பிரித்வி ஷா அணியின் ஒரு முக்கியமான வீரர் என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எல்லோரும் அவரை இன்னும் சீராக பார்க்க விரும்புகிறார்கள். அவர் விளையாடும் விதத்தை அனைவரும் விரும்புகிறோம் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் திறமையானவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் இதே போன்று தொடர்ச்சியாக ரன்களைச் சேர்க்க வேண்டும். அவரால் அதை எவ்வளவு அதிகமாகச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாக டெல்லி அணியின் வெற்றியும் தொடரும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை