ஐபிஎல் 2024: தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

Updated: Mon, May 27 2024 22:55 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில்  ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. இதையடுத்து அந்த அணிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்களைக் கொண்டு முன்னாள் வீரார்கள் தொடரின் சிறந்த அணியை கணித்துள்ளனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தனது ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார்.  அவர் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கேகேஆர் அணியின் சுனில் நரைனையும், ஆர்சிபி வீரர் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.

அவர் தேர்வு செய்துள்ள அணியின் மூன்றாம் வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனும், நான்காம் இடத்திற்கு ரியான் பராக்கையும், ஐந்தாம் இடத்திற்கு லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரனையும் தேர்வு செய்துள்ளார். மேற்கொண்டு கேகேஆரின் ஆண்ட்ரே ரஸல், ஆர்சிபி அணியின் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்துள்ள அவர், பந்துவீச்சாளர்களாக மும்பை அணியின் ஜஸ்ப்ரித் பும்ராவையும், கேகேஆரின் வருண் சக்ரவர்த்தி, ராஜஸ்தானின் டிரெண்ட் போல்ட், சன்ரைசர்ஸின் நடராஜன் ஆகியோருக்கு வாய்ப்பளித்துள்ளார். 

ஹர்ஷா போக்லே தேர்வு செய்த ஐபிஎல் அணி: விராட் கோலி, சுனில் நரைன், சஞ்சு சாம்சன், ரியான் பராக், நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரஸல், தினேஷ் கார்த்திக், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, டிரெண்ட் போல்ட், டி நடராஜன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை