யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது.
இதையடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தொடக்கம் கொடுத்தார்.
அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் பந்துவீட்டு விளையாட நினைத்தார். ஆனால் அந்த பந்தானது கடைசி நொடியில் இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 7 ரன்களோடு நடையைக் கட்டினார். இதனால் பவர்பிளே முடிவில் கேகேஆர் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் தனது முதல் பந்திலேயே சுனில் நரைனின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது.