ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து மார்கஸ் ஸ்டொய்னிஸ் 19 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 42 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த குர்னால் பாண்டியா 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 43 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விகெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 

Advertisement

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கரண் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் 100 ரன்களை கடந்தது. 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 42 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங்கும் அதிரடியாக விளையாடி 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 19 ரன்களைச் சேர்த்த நிலையில் மயங்க் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் 102-0 என இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு ஓவர்களில் 123-2 என மாறியது. அதிலும் குறிப்பாக இப்போட்டியின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தை 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசி அனைவரையும் மிரளவைத்தார். 

 

Advertisement

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துவீச்சாகவும் இது பதிவானது. அதுமட்டுமின்றி தொடர்ந்து அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவ் இப்போட்டியில் சராசரியாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி பஞ்சாப் அணி பேட்டர்களை நிலைகுழைய வைத்துள்ளார். இந்நிலையில் அதிவேகமாக பந்துவீசி வரும் மயங்க் யாதவ் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News