ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதன்படி இப்போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.  

Advertisement

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களையும், ஷாபஸ் அஹ்மத் 59 ரன்களைச் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் 15 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 

Advertisement

பின் 65 ரன்களில் மெக்குர்க் விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அபிஷேக் போரல் 42 ரன்களையும், ரிஷப் பந்த் 44 ரன்களையும் சேர்த்ததை தவிற மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் அந்த அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகள் என 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. 

 

ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கேகேஆர், சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இப்போட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெய்து பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News