ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Updated: Mon, Apr 01 2024 14:29 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

அதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 191 ரன்களைக் குவிக்க, அதன்பின் இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் நேற்றைய போட்டிகள் முடிவுக்கு பின் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதன்படி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நான்காம் இடத்திற்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5ஆம் இடத்திலும் இடம்பிடித்துள்ளன. அதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

 

அதேசமயம் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகளை பின்னுக்கு தள்ளி 7ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியதன் மூலம், ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை