ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Fri, Mar 29 2024 15:17 IST
ஐபிஎல் 2024: புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ்! (Image Source: Google)

நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரியான் பராக்கின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் 185 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 7 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 84 ரன்களை குவித்தார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும், ராஜ்ஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸும் 44 ரன்களைச் சேர்த்து போராடிய நிலையிலும் டெல்லி அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. 

இந்நிலையில் இந்த  வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்றதுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இரண்டு வெற்றிகளைப் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 

 

அதனைத்தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளன. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடிய போட்டிகளில் தோல்வியைத் தழுவி கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன. 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை