சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்ற்ய் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் அஜிங்கியா ரஹான் ஒரு ரன்னிலும், டேரில் மிட்செல் 11 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜாவும் 16 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ஷிவம் தூபே இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஷிவம் தூபே 66 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களையும் சேர்க்க,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களைக் குவித்தது. 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் ரன்கள் ஏதுமின்றியும், கேஎல் ராகுல் 16 ரன்களுக்கும், தேவ்தத் படிக்கல் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தனது பங்கிற்கு 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் இப்போட்டியில் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னி அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 124 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னைச் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன்படி இத்தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 5 வெற்றி, 3 தோல்விகளைச் சந்தித்து 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பட்டியலின் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அதேசமயம் நான்காம் இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்து 8 புள்ளிகளுடன் 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொட்ர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் பட்டியலின் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களீல் நீடிக்கின்றனர்.
 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News