17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. லீக் சுற்றின் முடிவின் அடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு டாஸ் நிகழ்வு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. ஆனால் ஆட்டம் தொடங்கும் முன் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் இப்போட்டி கைவிடப்பட்டது. 

Advertisement

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தால ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் மோதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றியை ஈட்டும் என முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளது என நம்புகிறேன். ஏனெனில் சமீபத்தில் அவர்களின் செயல்பாடுகளை பார்க்கும் போது நிச்சயம் ஆர்சிபி அணிக்கான வெற்றி வாய்ப்பு தான் அதிகமாக உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

மேலும் அவர்களுக்கு இருந்த கடைசி போட்டியும் மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் ஆர்சிபி அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கு தங்கள் பணி என்ன என்பது நன்றாக தெரியும். அவர்களும் அதனை சிறப்பாக செய்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News