ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

Advertisement

அதுமட்டுமில்லாமல் இரு அணிகளுக்கும் இது மிகவும் மிக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் தலா 6 வெற்றி, 6 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 5ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற கட்டாயத்தில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

Advertisement

அதேசமயம் மறுபக்கம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இது மிக முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 5 வெற்றிகள், 7 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 7ஆம் இடத்தில் உள்ளது. இதனால் அந்த அணி அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெறுவதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைக் கணக்கில் கொண்ட பிளே ஆஃப் வாய்ப்பினை எதிர்பார்த்துள்ளது. 

இதனால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரிஷப் பந்த் இரண்டு முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அபராதம் வித்திக்கப்பட்டது.

 

இந்நிலையில் தான் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் மூன்றாம் முறையாக இந்த தவறை செய்த ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்து பிசிசிஐ உத்திரவிட்டுள்ளது. இதன்மூலம் ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் களமிறங்கமாட்டார். 

Advertisement

இதன் காரணமாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை டேவிட் வார்னர் அல்லது அக்ஸர் படேல் ஆகியோர் வழிநடத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் டேவிட் வார்னர் ஏற்கெனவே கடந்த சீசனில் அணியை வழிநடத்தியுள்ளார். இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News