டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய விராட் கோலி!

Updated: Fri, Mar 22 2024 21:24 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடிவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிரளவைத்தது. அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 8 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ராஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட விராட் கோலி 21 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் 21 ரன்களை எடுத்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். 

அதன்படி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் 12ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த 2ஆவது வீரர் எனும் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார். அதன்படி இப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் 345 இன்னிங்ஸில் இச்சாதனை படைத்து முதலிடத்திலும், விராட் கோலி 360 இன்னிங்ஸில் இச்சாதனையை படைத்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

 

டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 12ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள்

  • கிறிஸ் கெயில்(வெஸ்ட் இண்டீஸ்) - 345 இன்னிங்ஸ்
  • விராட் கோலி (இந்தியா) - 360 இன்னிங்ஸ்
  • டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 368 இன்னிங்ஸ்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து) - 432 இன்னிங்ஸ்
  • சோயப் மாலிக் (பாகிஸ்தான்) - 451 இன்னிங்ஸ்

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்

  • கிறிஸ் கெயில் - 14,562 ரன்கள்
  • சோயப் மாலிக் - 13,360 ரன்கள்
  • கீரென் பொல்லார்ட் - 12,900 ரன்கள்
  • அலெக்ஸ் ஹேல்ஸ் - 12,319 ரன்கள்
  • டேவிட் வார்னர் - 12,065 ரன்கள்
  • விராட் கோலி - 12,014 ரன்காள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை