எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்!

Updated: Thu, Apr 11 2024 13:02 IST
எனது வேலையை இருவரும் சிறப்பாக செய்து முடித்துள்ளனர் - ஷுப்மன் கில்! (Image Source: Google)

ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோரது சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 76 ரன்களையும், சஞ்சு சாம்சன் 68 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் ஷுப்மன் கில் அரைசதம் அடித்ததுடன், 72 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, இறுதியில் ராகுல் திவேத்தியா 22 ரன்களையும், ரஷித் கான் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியில் ரஷித் கான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியின் கடைசி 3 ஓவர்களில் 45 ரன்களை இலக்காக கொண்டு வர வேண்டும் என்பது தான் எங்களின் திட்டமாக இருந்தது. ஏனென்றால் போட்டியின் இறுதிக்கட்டத்து இதுபோன்ற இலக்குகளை சில நேரங்களில் எளிதாக எட்டமுடியும். கணக்கு போட்டு பார்த்தால், ஒரு பேட்ஸ்மேன் 9 பந்துகளுக்கு 22 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் 2 அல்லது 3 பந்துகள் மீதமிருக்கும் போதே வெற்றிபெற முடியும்.

இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த நான் விளையாட்டை முடிக்க விரும்பினேன், ஆனால் எனது வேலையை ராகுல் திவேத்தியா மற்றும் ரஷித் கான் இருவரும் சிறப்பாக செய்து முடித்ததற்காக மகிழ்ச்சியாக உள்ளது. கடைசி பந்தில் போட்டியை வெல்வது எப்போதும் எப்போதும் ஒரு சிறந்த உணர்வு. ரஷித் கானை உங்கள் அணியில் நீங்கள் எப்போதும் விரும்பும் நபராக இருப்பார். ஏனெனில் அவர் அத்தகைய போட்டியாளர்” என்று பாராட்டியுள்ளார். 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை