நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் - குமார் சங்கக்காரா!

Updated: Wed, May 08 2024 16:08 IST
நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் - குமார் சங்கக்காரா! (Image Source: Google)

டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில்இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை களமிறங்கினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் விக்கெட்டையும் இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் அதிரடியாக விளையாடி அபிஷேக் போரல் 65 ரன்களிலும், ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய குல்பதீன் நைப் 19 ரன்களுக்கு விக்க்ர்ட்டை இழந்தார். ஆனாலும் இறுதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களையும், ஷுபம் துபே 25 ரன்களைச் சேர்த்தனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சதத்தை நோக்கி நர்ந்த நிலையில் 86 ரன்களை எடுத்த போது சர்ச்சையான முறையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரரளாலும் இலக்கை எட்ட முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, “இது கடினமான ஒன்றுதான். ஆனாலும் தோல்விகள் ஏற்படுதுவது சகஜம் தாம். சீசனின் தொடக்கத்தில் நாங்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் தற்போது நாங்கள் சில தோல்விகளைச் சந்தித்துள்ளோம். ஆனால் அதுதான் தொடரின் சிறப்பே. நீங்கள் உங்கள் விளையாட்டில் தொடர்ந்து மேலேருக்க வேண்டும்.

நாங்கள் சில சாதாரண தவறுகளை செய்கிறோம் என்று நினைக்கிறேன். எங்கள் திட்டங்களில் நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், உண்மையில் செயல்படுத்துவதை நம்ப வேண்டும். நீங்கள் பந்துவீசும் போது, மைதானத்தின் தன்மைப் பொறுத்து அதற்கேற்றவாறான திட்டங்களை வகுக்க வேண்டும். அதில் பவுண்டரிகள் எல்லைகள் ஒவ்வொர் பக்கமும் எவ்வளவு பெரியது என கணக்கிட்டு அதற்கேற்றது போல் பந்துவீச வேண்டும்.

அதேபோல் இப்போட்டியின் பேட்டிங்கின் போது பவர்-பிளேயில் நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷுபம் துபே உள்ளிட்ட அனைவரும் ஒரு சுவாரஸ்யமான சேஸிங்கிற்கு உண்மையிலேயே தங்கள் பங்களிப்பை வழங்கினர். ஆனால் டி20 கிரிக்கெட்டில் நீங்கல் நிதானமாக விளையாடி அதிக டாட் பந்துகளை எதிர்கொண்டால் அது நீங்கள் இலக்கை துரத்துவதற்கு கடினமாக மாறிவிடும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை