நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா!

Updated: Fri, Apr 05 2024 15:25 IST
நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது - அஷுதோஷ் சர்மா! (Image Source: Google)

 

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்  இழப்பிற்கு 199 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 89 ரன்களைச் சேர்த்தார்.

அதன் பிறகு விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து  வெற்றி பெற்றது. குறிப்பாக இப்போட்டியில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ரஸா போன்ற அதிரடி வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் ஷஷாங்க் சிங் மற்றும் அஷுதோஷ் சர்மா இருவரும் சிறப்பாக விளையாடியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர்.

அதிலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் 6 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 61 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்ததுடன், இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அதேசமயம் இப்போட்டியில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அஷுதோஷ் சர்மா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 17 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 

இந்நிலையில் இப்போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டடம் குறித்து பேசிய அஷுதோஷ் சர்மா, “இத்தொடருக்கு முன்னதாக நான் பஞ்சப் கிங்ஸ் அணியுடன் எனது பயிற்சிகளை சிறப்பாக செய்துவந்தேன். ஆனால் என்னால் பஞ்சாப் அணியில் இடம்பிடிக்க முடியுமா என்ற சந்தேகத்தில், நான் வீட்டிற்குச் செல்ல தயாராக இருந்தேன். நான் இரவுக்கு எனது விமானத்தை முன்பதிவு செய்தேன், ஆனால் அவர்கள் என்னை அழைத்து 'இன்னும் ஒரு நாள் தங்குங்கள்' என்று சொன்னார்கள். நான் மீண்டு

அதன் காரணமாக நான் மற்றொரு பயிற்சியில் விளையாடவேண்டி இருந்தது. இருப்பினும் நான் அவர்கள் அணியில் தேர்வு செய்யப்படுவேனா இல்லையா என்பது எனக்கு தெரியாது. மேலும் நான் அவர்களுடன் செலவிடும் நேரத்தின் காரணமாக என்னால் மற்ற அணிகளின் தேர்வையும் தவறவிடுவேன் என்று நினைத்தேன். இருப்பினும் அவர் என்னை தங்கவைத்ததால் எனக்கு எதாவது நல்லது நடக்கு என்று நினைத்தேன்.  அப்போது நான் எடுத்த அந்த முடிவால் தான் இப்போட்டி இங்கு உள்ளேன். 

எல்லோரும் என்னை ஒரு ஸ்லாக்கர் (முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடும் வீரர்) மட்டுமே பார்த்தார்கள். ஆனால் அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சார் நீங்கள் முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாடும் வீரர் மட்டும் அல்ல, உங்களாலும் அதிக ரன்களை குவிக்க முடியும் என்றார். நீங்கள் சில அசாதாரண கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறீர்கள், அதை நம்புங்கள். அவரது அந்த அறிவுரை ரஞ்சி கோப்பை தொடரில் எனக்கு உதவியது. அதன் காரணமாக நான் எனது அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினேன். அவரின் அந்த அறிவுரை எனக்கு உத்வேகத்தை வழங்கியது. 

நேற்றைய போட்டியில்  ஷஷாங்க் சிங்கின் சிறப்பான இன்னிங்ஸ் இது. அவரால நேற்றைய போட்டியில் இலக்கை எளிதாக எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நாங்கள் இருவரும் அதிரடியாக விளையாடும் வீரர்கள். எங்களால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாட முடியும். அதனால் இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அழுத்தமான சூழ்நிலையைக் கண்டும் நாங்கள் அச்சமடையாமல் விளையாடியதன் மூலமாகவே எங்களால் இந்த வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை