ஜஸ்பிரித் பும்ரா தற்போது தயாராக உள்ளார் - மஹேலா ஜெயவர்தனே!

Updated: Sun, Apr 06 2025 20:05 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பஞ்சமின்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடப்பு ஐபிஎல் சீசனானது இதுவரை சிறப்பானதாக அமையவில்லை.

ஏனெனில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அந்த அணி தற்சமயம் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அந்த அணிக்கு தற்போது நற்செய்தி ஒன்று வந்துள்ளது. அதன்படி காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்றைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இது அந்த அணிக்கு கூடுதல் உத்வேகத்தை வழங்கியுள்ளது. 

ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டர்களை அச்சுறுத்தி வரும் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது ஐபிஎல் தொடரிலும் தனது ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நாளைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இப்போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவனில் பும்ரா இடம்பிடிப்பாரா என்ற கேள்விகள் அதிகரித்துள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனே, “ஜஸ்பிரித் பும்ரா தயாராக இருக்கிறார், இன்று அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டிக்காக அவர் தயாராக இருக்க வேண்டும். நேற்று அவர் இங்கு வந்தவுடன் எங்கள் பிசியோக்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின் அவர் இன்று எங்களில் பயிற்சி அமர்வுகளில் பங்கேற்று பந்துவீசினார்.எனவே எல்லாம் நன்றாக இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 133 போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்பிரித் பும்ரா 2 முறை 5 விக்கெட்டுகள் உள்பட 165 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரிலும் ஜஸ்பிரித் பும்ரா எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பது குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான், வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை