ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்த ஹர்திக் பாண்டியா!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 18ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேற்கொண்டு இத்தொடருக்கான பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிககள் ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. ஐபிஎல் தொடரில் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக தயாரிப்புகளில் மும்பை இந்தியன்ஸ் அணி இறங்கியுள்ளது. அந்தவகையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடங்கிய நிலையில், இன்றைய தினம் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் மும்பை இந்தியன்ஸ் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். மேலும் ஹர்திக் பாண்டிய பயிற்சி முகாமில் இணைந்த செய்தியை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக சமீபத்தி நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பிடித்திருந்தார். மேற்கொண்டு அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்கினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, திலக் வர்மா, டிரென்ட் போல்ட், நமன் திர், ராபின் மின்ஸ், கரன் சர்மா, ரியான் ரிக்கெல்டன், தீபக் சாஹர், முஜீப் உர் ரஹ்மான்*, வில் ஜாக்ஸ், அஷ்வனி குமார், மிட்செல் சான்ட்னர், ரீஸ் டாப்லி, ஸ்ரீஜித் கிருஷ்ணன், ராஜ் அங்கத் பாவா, வெங்கட் சத்யநாராயண ராஜு, பெவோன் ஜேக்கப்ஸ், அர்ஜுன் டெண்டுல்கர், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர், சூர்யகுமார் யாதவ்.