ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அதற்கு முட்டுக்கட்டை போடுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

Advertisement

அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து அசத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இப்போட்டியை எவ்வாறு அணுகுவார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “வைபவ் சூர்யவன்ஷியை நாம் என்ன பண்ண முடியும்? அது சவாலானதா இருக்கும்னு நினைக்கிறேன். நான் வந்த இந்த நேர்காணலில் இருந்தே, எனக்கு கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் வைபவ் குறித்து தான் உள்ளது. ஆனால் இது அவருக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்னை பொறுத்தவரையில் இது சவாலானாத இருக்கும் என்றாலும், அது  சுவாரஸ்யமாவும் இருக்கும். இது சுவாரஸ்யமா இருக்கும்.

Also Read: LIVE Cricket Score

அதன் காரணமாக நாம் தற்போது அவர் மீது அதிகளவு கவனத்தை செலுத்த வேண்டாம் என்று தோன்றுகிறது. நான் முன்பு சொன்னது போலவும், பதிலளித்தது போலவும், ஒருவேளை அவரைச் சுற்றி ஒரு ஆதரவு அமைப்பை ஏற்படுத்தி, அதை அவரால் முடிந்தவரை சிறப்பாக வழிநடத்த உதவ முயற்சிப்பது ஒரு கேள்வியாக இருக்கலாம். ஏனென்றால் இங்கே நான் கேள்விப்பட்டதெல்லாம் வைபவ் பற்றிய கேள்விகள் மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News