ஐபிஎல் 2025: தொடரில் இருந்து விலகும் ஃபெர்குசன்? பின்னடைவை சந்திக்கும் பஞ்சாப் கிங்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 31ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் கேகேஆர் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியாது தோல்விக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் லோக்கி ஃபெர்குசன் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூவர் அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது லோக்கி ஃபெர்குசன் தொடை பகுதியில் காயத்தை சந்தித்தார். அதன் பின் காயம் தீவிரமடைந்ததை அடுத்து ஓவரை முழுமையாக விசாமல் பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக அந்த ஓவரின் எஞ்சிய பந்துகளை மார்கஸ் ஸ்டொய்னிஸ் வீசி இருந்தார். மேற்கொண்டு பஞ்சாப் அணி தோல்வியடைந்ததற்கு ஃபெர்குசனின் காயமும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தான் லோக்கி ஃபெர்குசனின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், சிகிச்சைக்காக அவர் தயாகம் திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ஃபெர்குசன் தொடரில் இருந்து முழுமையாக விலகும் பட்சத்தில் அடு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இதனால் பஞ்சாப் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Also Read: Funding To Save Test Cricket
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.