ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு ரஹ்மனுல்லார் குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய சுனில் நரைன் 11 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் குர்பாஸுடன் இணைந்த கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் சீரான வேகத்தில் உயரத்தொடங்கியது. 

Advertisement

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹ்மனுல்லா குர்பாஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் அஜிங்கியா ரஹானேவும் 30 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த அங்கிரிஷ் ரகுவன்ஷி - ஆண்ட்ரே ரஸல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அங்கிரிஷ் ரகுவன்ஷி 5 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரே ரஸல் அரைசதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார். 

மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 57 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடி வந்த ரிங்கு சிங் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையானா ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 206 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, ரியான் பராக் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். 

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய குனால் சிங் ரத்தோரும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 ரன்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்த கேப்டன் ரியான் பராக்கும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 34 ரன்களைச் சேர்த்த நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய துருவ் ஜூரெல் மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோரும் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையார் ஒருபக்கம் ஸ்டிரைக்கை மாற்றித்தர மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரியான் பராக் தனது அரைசதத்தை பூர்த்தி செய்து அசத்தியதுடன், அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார். 

Advertisement

அதன்பின் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரியான் பராக் விக்கெட்டை இழக்க, மறுப்பக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக் 6 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 95 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் களத்தில் இருந்த ஷுபம் தூபே 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என மொத்தமாக 20 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களை சேர்த்த கையோடு ரன் அவுட்டாகினார். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கேகேஆர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடருக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News