ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தொடரில் இதுவரை 7 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்துள்ளன.

Advertisement

இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இத்தொடரில் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக, ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெண்டஸ் அணிகளுக்கு எதிரான போட்டியானது வேறு மைதானத்திற்கு மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின

Advertisement

ஏனெனில் ராம நவமி கொண்டாட்டங்கள் காரணமாக கொல்கத்தா காவல்துறை அனுமதியை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேற்கொண்டு மேற்கு வங்கத்தில் கொண்டாடத்தில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்து பணியில் காவல்துறை ஈடுபட இருப்பதன் காரணமாக, ஐபிஎல் போட்டிக்கான பாதுக்காப்பை வழங்க இயலாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் சினேகாஷிஷ் கங்குலியும் உறுதி செய்திருந்தார்.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது ஏப்ரல் 8ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 6ஆம் தேதி இரண்டு போட்டிகளுக்கு பதிலாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த ஆண்டு ராம நவமி காரணமாக ஐபிஎல் போட்டியின் அட்டவணை மாற்றப்பட்டது. அதன்படி கடந்த ஐபிஎல் சீசன்னில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருந்த போட்டியானது ராம நவமி அன்று நடைபெற இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டது. அதோபோல் இந்த போட்டியும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News