ஐபிஎல் 2025: மார்க்ரம், பதோனி அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 181 டார்கெட்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபற்ற 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து ரியான் பாராக் கேப்டனாக செயல்படுகிறார். மேற்கொண்டு அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
அதன்படி அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர்கள் நிக்கோலஸ் பூரன் 11 ரன்களுடனும், கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தான்ர். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் மற்றும் ஆயூஷ் பாதோனி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இருவரும் இணைந்து 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் ஐடன் மார்க்ரம் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 66 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த ஆயூஷ் பதோனியும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 50 ரன்களுடன் நடையைக் கட்டினார். இறுதியில் அப்துல் சமத் 4 சிக்ஸர்களுடன் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 7 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.