ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் பிளே ஆஃப் சுற்றை நெருங்கிவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலாஞ்சர்ச் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறிவுள்ளன. இருப்பினும் இதில் எந்த இரு அணிகள் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

அதற்கேற்றவகையில் நாளை நடைபெறும் தொடரின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லாக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெறும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ஆர்சிபி அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானி இணைந்துள்ளார். ஏனெனில் சர்வதேச போட்டிகள் காரணமாக ஆர்சிபி அணியில் இடம்பிடித்திருந்த ஜேக்கப் பெத்தெல் மற்றும் லுங்கி இங்கிடி இருவரும் தாயகம் திரும்பவுள்ளதான் காரணமாக, தற்காலிக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் முஸரபானி அணியில் இணைந்துள்ளார். 

இதன்மூலம் அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. முன்னதாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்துள்ள லுங்கி இங்கிடி பிளே ஆஃப் சுற்றில் இருந்து விலகினார். இந்நிலையில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானியை ஆர்சிபி அணியானது ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வே அணிக்காக 12 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்காகவும், இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காகவும் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், டிம் செஃபெர்ட், மயங்க் அகர்வால், ஸ்வஸ்திக் சிகாரா, பிளெசிங் முஸரபனி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News