ஐபிஎல் 2025: மார்க்கீ பிளேயர் பட்டியலில் ஸ்ரேயஸ், பந்த், ராகுல், அர்ஷ்தீப்!

Updated: Fri, Nov 15 2024 23:38 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அந்தவகையில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 1,165 வீரர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த 409 வீரர்களும் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் அதிகாரபூர்வ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மெகா ஏலத்திற்கு பங்கேற்கும் 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. அந்தவகையில், இந்த ஏலத்தில் பங்கேற்கும் 574 வீரர்களில் 366 பேர் இந்திய வீரர்கள். 208 (3 அசோசியேட் நாடுகளின் வீரர்கள் உள்பட) வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இதுதவிர்த்து இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ள் வீரர்களின் அதிகபட்ச அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 81 வீரர்கள் ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளார். மேற்கொண்டு ரூ.1.5 கோடி அடிப்படை விலையில் 27 வீரர்களும், ரூ.1.25 கோடி அடிப்படை விலையில் 18 வீரர்களும், ரூ.1 கோடி அடிப்படை விலையில் 23 வீரர்களும் தங்களது பெயர்களை பதிவுசெய்துள்ளனர். மேற்கொண்டு எந்தெந்தெ வீரர்கள் எப்போது ஏலம் விடப்படுவார்கள் என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

அதனடிப்படையில் ஓவ்வொரு செட்டிலும் 6 முதல் 7 வீரர்கள் ஏலம் விடப்படவுள்ளனர். அதன்படி முதல் செட்டில் இந்திய அணியைச் சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங் ஆகியோருடன் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா உள்ளிட்ட வீரர்களும், இரண்டாவது செட்டில் சஹால், கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோருடன் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனும், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லரும் ஏலம் விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஐபிஎல் 2025 மெகா ஏலம்

  • செட் 1 - ஜோஸ் பட்லர், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், அர்ஷ்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், காகிசோ ரபாடா
  • செட் 2- யுஸ்வேந்திர சஹால், கேல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராக், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மில்லர்
  • செட் 3- ஹாரி புரூக், டெவான் கான்வே, ஃபிரேசர் மெக்குர்க், ஐடன் மார்க்ரம், தேவ்தத் படிக்கல், ராகுல் திரிபாதி, டேவிட் வார்னர்
  • செட் 4- ரவி அஸ்வின், வெங்கடேஷ் ஐயர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், ரச்சின் ரவீந்திரா, மார்கஸ் ஸ்டொய்னிஸ்
  • செட் 5- ஜானி பேர்ஸ்டோவ், குயின்டன் டி காக், ரஹ்மனுல்லா குர்பாஸ், இஷான் கிஷன், பில் சால்ட், ஜித்தேஷ் சர்மா
  • செட் 6- டிரெண்ட் போல்ட், ஜோஷ் ஹேசில்வுட், ஆவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, நடராஜன், ஆன்ரிச் நோர்ட்ஜே, கலீல் அஹ்மத்
  • செட் 7- நூர் அஹ்மத், ராகுல் சஹார், வநிந்து ஹசரங்கா, சலாம்கெயில், மஹீஷ் தீக்ஷனா, அடம் ஸாம்பா
  • செட் 8 - யாஷ் துல், அபினவ் மனோஹர், கருண் நாயர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, அன்மோல்ப்ரீத் சிங், நெஹால் வதேரா, அதர்வா டைடே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை