ரிஷப் பந்த் நிச்சயம் 25-28 கோடிக்கு ஏலம் செல்வார் - ராபின் உத்தப்பா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் மிக முக்கிய வீரராக இருந்துவந்த அவர் தற்சமயம் அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளது பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது. மேலும் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணி அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை மட்டும் தக்கவைத்தது.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் இடையேயான பிரச்சனை குறித்து பல்வேறு தகவல்களும் உலா வந்தன. மேற்கொண்டு சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் எதிர்வரும் வீரர்கள் ஏலத்தில் எவ்வளவு தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னள் வீரர் ரபீன் உத்தப்பா, “எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்தில் ரிஷப் பந்த் சுமார் ரூ.25-28 கோடிக்கு ஏலம் எடுக்கப்படுவார் என நினைக்கிறேன். இந்த ஏலத்தில் அவர் நிச்சயமாக பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவர். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டராக பஞ்சாப் கிங்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இவரை ஏலம் எடுக்க ஆர்வம் காட்டும். அதனால் அவர் ஏலத்திற்கு எந்த விலைக்கு செல்வார் என்பதை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம், டேல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயருக்காக கடுமையான போட்டியை கொடுக்கும். மேலும் அவர் ரூ.15 முதல் 20 கோடிக்கும், ஃபாஃப் டூ பிளெசிஸ் ரூ.10 கோடிக்கும் என ஏலம் செல்வார்கள் என எதிர்பார்க்கிறேன். மேலும் இந்திய அணியின் இளம் வீரர்கள் நெஹால் வதேரா, அஷுதோஷ் சர்மா போன்றவர்களும் நிச்சயம் பெரிய தொகைக்கும் ஏலம் செல்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.