தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல்லின் மோசமான சாதனையை சமன்செய்த ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இரண்டு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
அதன்படி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் ரியான் ரிக்கெல்டன் இணை தொடக்கம் கொடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் கலீல் அஹ்மத் முதல் ஓவரை வீசினார்.
அந்த ஓவரை எதிர்கொண்ட ரோஹித் சர்மா 4 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி ஷிவம் தூபே கையில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக முறை டக் ஆவுட்டான வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல ஆகியோரின் சதனையை சமன்செய்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் ஐபிஎல் தொடரில் தலா 18 முறை டக் அவுட்டானதே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் ரோஹித் சர்மாவும் 18ஆவது முறையாக டக் அவுட்டாகி அவர்களின் சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியலில் பியூஷ் சாவ்லா மற்றும் சுனில் நரைன் இருவரும் தலா 16 முறை டக் அவுட்டாகி இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட்டான வீரர்கள்
- 18 - ரோஹித் சர்மா (253 இன்னிங்ஸ்)
- 18 - கிளென் மேக்ஸ்வெல் (129 இன்னிங்ஸ்)
- 18 - தினேஷ் கார்த்திக் (234 இன்னிங்ஸ்)
- 16 - பியூஷ் சாவ்லா (92 இன்னிங்ஸ்)
- 16 - சுனில் நரைன் (111 இன்னிங்ஸ்)
- 15 - மன்தீப் சிங் (98 இன்னிங்ஸ்)
- 15 - ரஷீத் கான் (60 இன்னிங்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண ராஜு.
இம்பேக்ட் வீரர்கள் - விக்னேஷ் புதூர், அஸ்வனி குமார், ராஜ் பாபா, கார்பின் போஷ், கர்ண் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ருதுராஜ் கெய்க்வாட்(கேப்டன்), ரச்சின் ரவீந்திர, தீபக் ஹூடா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், எம்எஸ் தோனி(கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - ராகுல் திரிபாதி, கமலேஷ் நாகர்கோட்டி, விஜய் சங்கர், ஜேமி ஓவர்டன், ஷேக் ரஷீத்