ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக பயிற்சி மேற்கொள்ளும் சூர்யவன்ஷி - காணொளி!

Updated: Sat, Apr 12 2025 18:04 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் லீக் சுற்றின் முடிவில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் 28ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் முறையாக ஜெய்ப்பூரில் விளையாட இருப்பதால் இப்போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. 

இருப்பினும் அந்த அணியின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குள்ளாகி வருகிறது. ஏனெனில் சஞ்சு சாம்சன், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்டோர் ஒருபக்கம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறிவருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதீஷ் ரானா உள்ளிட்டோர் தலா ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடிய நிலையில் மற்ற போட்டிகளில் சோபிக்க தவறியுள்ளனர். 

இதனால் நாளைய போட்டிக்கான பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. அதற்கேற்றவகையில் ராஜஸ்தான் ராயல்ஸின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அவர் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெளியிட்டு, வைரலாகி வருகிறது. 

முன்னதாக நடந்து முடிந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் 13 வயதே ஆன பிகாரைச் சேர்த்த வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடி செலவழித்து ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் இவருக்கு தற்போது வரை லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி வாய்ப்பை பெறுவாரா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Also Read: Funding To Save Test Cricket

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை