தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கேஎல் ராகுல் தலைமைத் தாங்கிய இந்திய ஒருநாள் அணி 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்து தென் ஆப்பிரிக்காவிடம் ஒயிட்வாஷ் ஆனது.

Advertisement

இந்நிலையில் கேப்டன்சி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன. இதற்கிடையில் கேஎல் ராகுல் மிகச்சிறந்த வீரர் மற்றும் சிறந்த கேப்டனும் கூட என இந்திய அணியின் முன்னாள் வீரரும், லக்னோ ஐபிஎல் அணியின் ஆலோசகருமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “கே.எல்.ராகுலைப் பற்றி விமர்சிக்க இது ஒரு விஷயமே இல்லை. அவர் ஒரு பேட்டர் மட்டுமல்ல, வெளிப்படையாக ஒரு தலைவரும் கூட. 

மேலும் அவர் அணில் மூன்று வகையிலான பொறுப்புகளை செய்துவருகிறார். அது விக்கெட் கீப்பர், தொடக்க வீரர் மற்றும் சிறந்த கேப்டன் என அணிக்கு தேவையான அனைத்து வகையிலும் உதவிவருகிறார். 

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பஞ்சாப் மற்றும் இந்திய அணிக்காக பல அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தி அதிக ரன்களையும் குவித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக ஐபிஎல்15ஆவது சீசனில் புதிதாக இணைந்துள்ள லக்னோ அணி கேஎல் ராகுலை 17 கோடிக்கு வாங்கி, அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News