ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஆல் ரவுண்டர்களுக்கு மல்லுக்கட்டும் அணிகள்!

Updated: Sun, Feb 13 2022 13:18 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம்  நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.

இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான ஏலாம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அதேபோல் வெஸ்ட் இண்டீஸின் ஓடியன் ஸ்மித்தை ஹைதராபாத்துடன் போட்டியிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

1) டொமினிக் டிரேக்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்,1.1 கோடி ரூபாய்

2) சிவம் துபே - சென்னை சூப்பர் கிங்ஸ், 4 கோடி ரூபாய்

3) கே கௌதம் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 90 லட்சம் ரூபாய்

4) மார்கோ ஜான்சன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 4.2 கோடி ரூபாய்

5) கிறிஸ் ஜோர்டான் - ஏலம் எடுக்கப்படவில்லை

6) லியாம் லிவிங்ஸ்டோன் - பஞ்சாப் கிங்ஸ், 11.5 கோடி ரூபாய்

7) ஜேம்ஸ் நீஷம் - ஏலம் எடுக்கப்படவில்லை

8) விஜய் சங்கர் - குஜராத் டைட்டன்ஸ்,1.4 கோடி ரூபாய்

9) ஒடியன் ஸ்மித் - பஞ்சாப் கிங்ஸ்,6 கோடி ரூபாய்

10) ஜெயந்த் யாதவ் - குஜராத் டைட்டன்ஸ், 1.7 கோடி ரூபாய்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை