ஐபிஎல் 2021: புதிய மகுடம் சூடிய ரோஹித் சர்மா!

Updated: Thu, Sep 23 2021 20:17 IST
IPL: Rohit Sharma becomes first batter to score over 1000 runs against one franchise (Image Source: Google)

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்யும் மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சென்னைக்கு எதிரான ஆட்டத்தின்போது ஓய்வில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, இன்றைய ஆட்டத்தில் கலக்கி வருகிறார்.

இன்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா 18 ரன்களை கடந்தபோது ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரே ஒரு அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனை தான் அது. அவரது சாதனையை மும்பை அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஒரே ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் பெங்களூரு அணியின் டிவில்லியர்ஸ், விராத் கோலி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பெங்களூருவுக்கு எதிராக அதிக ரன்களை விளாசிய தல தோனியும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை