கடந்த 2023 - 24 ரஞ்சி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணிக்கும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கும் இடையேயான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய மும்பை அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 237 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் அஜிங்கியா ரஹானே 86 ரன்களுடனும், சர்ஃப்ராஸ் கான் 54 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் அபாரமாக விளையாடி வந்த அஜிங்கியா ரஹானே சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 97 ரன்களை எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

Advertisement

அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்ஃப்ராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 15ஆவது சததைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஷம்ஸ் முலானி 5 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய தனுஷ் கோட்டியானும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரைசததை பதிவுசெய்த கையோடு 64 ரன்களில் விக்கெட்டை இஅந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய மஹித் அவஸ்தி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய ஷர்துல் தக்கூரும் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய சர்ஃப்ராஸ் கான் தனது இரட்டை சதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 539 ரன்களைக் குவித்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை சர்ஃப்ராஸ் கான் 25 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 221 ரன்களுடன் தொடர்ந்தர். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஜுனெத் கான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மும்பை அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த அபிமன்யூ ஈஸ்வரன் - சாய் சுதர்ஷன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஷர்தூல் தாக்கூர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்படி, இப்போட்டியின் போது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷர்தூல் தாக்கூர், அந்த நிலைமையிலும் பேட்டிங் செய்ததுடன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் அவரது உடல்நலம் மோசமானதை தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்சமயம் உடல்நலம் தேரியுள்ள ஷர்தூல் தாக்கூர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News