அயர்லாந்து - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் நிக்கும் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதி - இப்ராஹிம் ஸத்ரான் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஸத்ரான் 17 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

பின்னர் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் 36 ரன்கள் எடுத்த நிலையில் கரெத் டெலானி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் அயர்லாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் ஜோஷுவா லிட்டில், மார்க் அதிர், குர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News