IRE vs NZ, 2nd T20I: கிளெவர் அதிரடி அரைசதம்; அயர்லாந்துக்கு 180 டார்கெட்!

Updated: Wed, Jul 20 2022 22:12 IST
Image Source: Google

அயர்லாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பெல்ஃபெஸ்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஃபின் ஆலன்  - தனே கிளெவர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் 20 பந்துகளில் 35 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய கிளென் பிலீப்ஸும் 26 ரன்களோடு நடையைக் கட்டினார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனே கிளெவர் 39 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அரைசதம் கடந்த பின் அதிரடியில் மிரட்டிய தனே கிளெவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 78 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்துள்ளது.

அயர்லாந்து அணி தரப்பில் கிரேக் யங் மற்றும் ஜோஷுவா லிட்டில் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை