Ireland vs Pakistan Dream11 Prediction 2nd T20I: பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒருவெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமனில் வைத்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி தொடரையும் வெல்லும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகள் உள்ளன. இதனால் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முயற்சியில் விளையாடவுள்ளன.

IRE vs PAK : போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs பாகிஸ்தான்
  • இடம் - க்ளோன்டார்ஃப் கிரிக்கெட் மைதானம், டப்ளின்
  • நேரம் - இரவு 7.30 மணி 

IRE vs PAK: Pitch Report

Advertisement

டப்ளினில் உள்ள இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான வேகம் மற்றும் ஸ்விங்கும் இருக்கும் என்பதால் அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IRE vs PAK: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 03
  • அயர்லாந்து - 02
  • பாகிஸ்தான் - 01

IRE vs PAK: Live Streaming Details

அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இத்தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சியும் நேரலை செய்யவில்லை. அதேசமயம் ஃபேன் கோட் ஓடிடி செயலியில் இத்தொடரை குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ரசிகர்கள் இத்தொடரை காணலாம்.

Ireland vs Pakistan Predicted XI

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் டக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், பெஞ்சமின் வைட்

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், சைம் அயூப், பாபர் ஆசாம் (கே), ஃபகர் ஸமான், ஷதாப் கான், உஸ்மான் கான், இஃப்திகார் அஹ்மத், ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா, அப்பாஸ் அஃப்ரிடி

IRE vs PAK: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: முகமது ரிஸ்வான் (கேப்டன்)
  • பேட்டர்ஸ்: பாபர் ஆசாம், ஃபகார் ஸமான், ஹாரி டெக்டர், ஆண்ட்ரூ பால்பிர்னி(துணைக்கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர், இஃப்திகார் அஹ்மத், கர்டிஸ் காம்பெர்
  • பந்துவீச்சாளர்கள்: கிரேய்க் யங், ஷஹீன் அஃப்ரிடி, முகமது அமீர்
Advertisement

Ireland vs Pakistan Fantasy Tips, IRE vs PAK: Dream11 Team, Ireland vs Pakistan: Predicted XIs, IRE vs PAK: Pitch Report, IRE vs PAK: Live Streaming Details, IRE vs PAK: Head-to-Head, IRE vs PAK: Dream11 Prediction 3rd T20I

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News