IRE vs SA, 2nd T20I: ராஸ், மார்க் அதிர் அபார ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது அயர்லாந்து!

Updated: Mon, Sep 30 2024 08:48 IST
Image Source: Google

அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ராஸ் அதிர் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர். 

இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 137 ரன்களையும் குவித்து அசத்தியது. அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 7 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களைச் சேத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ராஸ் அதிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

ஆனால் சதமடித்த கையோடு 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 100 ரன்களைச் சேர்த்த கையோடு ராஸ் அதிர் தனது விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்டிஸ் காம்பேர் சந்தித்த முதல் பந்திலேயும், நெய்ல் ராக் ஒரு ரன்னிலும், மார்க் அதிர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, லிசாத் வில்லியம்ஸ், பேட்ரிக் க்ரூகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ரியான் ரிக்கெல்டன் - ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரியான் ரிக்கெல்டன் ஒரு பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 36 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ரீஸா ஹென்றிக்ஸுடன் இனைந்த மேத்யூ பிரிட்ஸ்கீயும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்கள் எடுத்த நிலையில் ரீஸா ஹென்றிஸுக்ம், 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்த நிலையில் மேத்யூ பிரீட்ஸ்கியும் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அணியின் நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டல், பேட்ரிக் க்ரூகர், என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் தென் ஆப்பிரிக்க அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மார்க் அதிர் 4 விக்கெட்டுகளையும், கிரஹாம் ஹூமே 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் அயர்லாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்திய ராஸ் அதிர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை