IRE vs SA, 2nd T20I: ராஸ் அதிர் அபார சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 196 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஆஃப்கானிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ராஸ் அதிர் இணை தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.
இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது அரைசதங்களை பதிவுசெய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 137 ரன்களையும் குவித்து அசத்தியது. அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் பால் ஸ்டிர்லிங் 7 பவுண்ட்ரி, ஒரு சிக்ஸர் என 52 ரன்களைச் சேத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹாரி டெக்டர் 5 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த ராஸ் அதிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் சதமடித்த கையோடு 5 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் என 100 ரன்களைச் சேர்த்த கையோடு ராஸ் அதிர் தனது விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்டிஸ் காம்பேர் சந்தித்த முதல் பந்திலேயும், நெய்ல் ராக் ஒரு ரன்னிலும், மார்க் அதிர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வியான் முல்டர் 2 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி, லிசாத் வில்லியம்ஸ், பேட்ரிக் க்ரூகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.