Ireland vs South Africa 3rd ODI, Dream11 Prediction: அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

Advertisement

இதையடுத்து அயர்லாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்று அசத்திய தென் ஆப்பிரிக்க அணியானது இப்போட்டியிலும் வெற்றிபெற்று, அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதேசமயம் ஒருநாள் தொடரை இழந்துள்ள அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றிபெற்று ஆறுதலை தேடும் முனைப்பில் விளையாடும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

Advertisement

IRE vs SA 3rd ODI: Match Details

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - அக்டோபர் 07, மாலை 5 மணி (இந்திய நேரப்படி)

IRE vs SA 3rd ODI: Live Streaming Details

அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் இத்தொடரை ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

IRE vs SA 3rd ODI Head-to-Head In T20Is

  • மோதிய போட்டிகள் - 10
  • தென் ஆப்பிரிக்கா - 08
  • அயர்லாந்து - 01
  • முடிவில்லை - 01
Advertisement

IRE vs SA 3rd ODI Ground Pitch Report

இப்போட்டி நடைபெறவுள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானதில் இதுவரை 53 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 35 முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்ற நிலையில் 18 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணி வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் டாஸ் மிக முக்கிய பங்கினை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 249 ரன்களாவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 209 ரன்களாகவும் உள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 313 ரன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ireland and South Africa Possible XIs

Advertisement

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கே), ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், லோர்கன் டக்கர், ஆண்டி மெக்பிரைன், ஜார்ஜ் டக்ரெல், ஃபியோன் ஹேண்ட், மார்க் அதிர், கிரேக் யங், கிரஹாம் ஹியூம்

தென் ஆப்பிரிக்கா: ரியான் ரிக்கெல்டன், ரீஸா ஹென்றிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென் (கே), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அண்டில் பெஹ்லுக்வாயோ, ஜார்ன் ஃபோர்டுயின், லிசாத் வில்லியம்ஸ், நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்

IRE vs SA 3rd ODI: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரியான் ரிக்கல்டன்
  • பேட்டர்ஸ்: ஹாரி டெக்டர், பால் ஸ்டிர்லிங், ராஸ்ஸி வான்டெர் டூசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
  • ஆல்-ரவுண்டர்கள்: ஆண்டி மெக்பிரைன், கர்டிஸ் காம்பெர்
  • பந்துவீச்சாளர்கள்: லுங்கி இங்கிடி, லிசாத் வில்லியம்ஸ், கிரெய்க் யங், மார்க் அதிர், 
Advertisement

IRE vs SA 3rd ODI Dream11 Prediction, Today Match IRE vs SA, IRE vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, IRE vs SA Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Ireland and South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News