IRE vs SA: தென் ஆப்பிரிக்க தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிப்பு!

Updated: Wed, Jun 30 2021 20:46 IST
ire-vs-sa-ireland-have-announced-their-odi-and-t20i-squads-for-the-sa-series (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்பிரிக்க அணி, அத்தொடர் முடிந்ததும் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடருக்கான ஆண்ட்ரூ பால்பிர்னி தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த கெவின் ஓ பிரையன், டி20க்கான அயர்லாந்து அணியில் மட்டும் இடம்பிடித்துள்ளார். 

அதேபோல் அனுபவ வீரர்களான பால் ஸ்டிர்லிங், வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், டெக்டர் ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 

ஒருநாள் அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் கென்னடி, ஜோஷ் லிட்டில், ஆண்ட்ரூ மெக்பிரைன், கிரேம் மெக்கார்டர், பேரி மெக்கார்த்தி, வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிரேக் யங் .

டி 20  அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), மார்க் அடேர், ஜார்ஜ் டோக்ரெல், ஷேன் கெட்கேட், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கார்த்தி, வில்லியம் மெக்கிலிண்டாக், கெவின் ஓ பிரையன், நீல் ராக், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரேக் யங். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை