அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி டப்லினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யவதாக முடிவு செய்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் - ஜேன்மேன் மாலன் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் இருவரும் சதமடித்து அணி இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். 

Advertisement

இதன்மூலம் 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 346 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேன்மேன் மாலன் 177 ரன்களையும், டி காக் 120 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய அயர்லாந்து அணி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அணியின் முன்வரிசை வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து அணியின் தோல்வி உறுதியானது. 

இருந்தாலும் விடா முயற்சியோடு போராடிய கர்டிஸ் கேம்பர் - சிமி சிங் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு ஆறுதலளித்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தனர். அதன்பின் 54 ரன்களில் கர்டிஸ் கேம்பர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய சிமி சிங் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். 

இருப்பினும் அயர்லாந்து அணி 47.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சிமி சிங் 100 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

Advertisement

இதன் மூலம் அயர்லாந்து அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News