IRE vs ZIM: அயர்லாந்திற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஜிம்பாப்வே!

Updated: Sat, Sep 04 2021 21:04 IST
IRE vs ZIM: Zimbabwe end up with a total of 124/4 (Image Source: Google)

அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க வீரர்களான டினாஷே கமுன்ஹுகம்வே, மதேவரே, சகாப்வா ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் எர்வின் - டியான் மியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயர்ச்சித்தது. இதில் மியர்ஸ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த கிரேக் எர்வின் அரைசதம் கடந்து அசத்தினார். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிரேக் எர்வின் 67 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை