டி20 உலகக்கோப்பை 2022: பால்பிர்னி தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Sep 20 2022 21:54 IST
Ireland announce a promising squad for 2022 T20 World Cup (Image Source: Google)

எட்டாவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம் தேதி துவங்கும் இந்த தொடர் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து அணிகளின் கனவாக இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், ஒவ்வொரு அணியும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை ஓரிரு வாரங்களுக்கு முன்பே அறிவித்துவிட்ட நிலையில், அயர்லாந்து அணியும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தங்களது அணியை அறிவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் பவுல் ஸ்டிர்லிங், மார்க் அடைர், சாம்பர், ஜார்ட் டாக்ரெல் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் கிராய்க் யங், சிமி சிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் போன்ற வீரர்களும் டி.20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம் கிடைத்துள்ளது.

அயர்லாந்து அணி: ஆண்ட்ரூ பால்பிர்னி (கேப்டன்), பால் ஸ்டிர்லிங், மார்க் அதிர், கர்டிஸ் காம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் தோனே, ஃபின் ஹேண்ட், ஜோஸ் லிட்டில், பேரி மெக்கர்தி, கானர் ஆல்பர்ட், சிமி சிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கிராய்க் யங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை