USA vs IRE: தொடரை சமன் செய்தது அயர்லாந்து!

Updated: Fri, Dec 24 2021 13:07 IST
Image Source: Google

அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் லோர்கன் டக்கர் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சரியாக சோபிக்காததால் 18.5 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 84 ரன்களைச் சேர்த்தார். அமெரிக்க அணி தரப்பில் நெட்ரவால்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய அமெரிக்க அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அணியில் யாரும் நிலைத்து விளையாட தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதன்மூலம் அயர்லாந்து அணி 9 ரன்கள் வித்திசத்தில் அமெரிக்க அணியை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன் செய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை