அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கண்கக்கில் சமன்செய்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 

Advertisement

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் அயர்லாந்து அணியானது 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகி விருதை சமாரி அத்தபத்துவும், தொடர் நாயகி விருதை அர்லீன் கெல்லியும் கைப்பற்றினர். 

Advertisement

இந்நிலையில் சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி புதுப்பித்துள்ளது. அதன்படி பேட்டர்கள் வரிசையில் இங்கிலாந்தின் நாட் ஸ்கைவர் பிரண்ட் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் இரண்டாம் இடத்திலும் தொடர்கின்றனர். அதேசமயம் இத்தொடரில் சோபிக்க தவறிய இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து ஒரு இடம் பின் தங்கி நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

அதேசமயம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தொடர்ந்து 9ஆம் இடத்தில் நீடித்து வருகிறார். அதேசமயம் அயர்லாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  இரு அணி வீராங்கனைகளும் தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

அதன்படி அயர்லாந்து அணி கேப்டன் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 9 இடங்கள் முன்னேறி 28ஆம் இடத்தையும், லியா பால் 4 இடங்கள் முன்னேறி 29ஆம் இடத்தையும், இலங்கை அணியின் நிலாக்‌ஷி டி சில்வா 3 இடங்கள் முன்னேறி 32ஆம் இடத்தையும், அயர்லாந்தின் ஏமி ஹண்டர் 10 இடங்கள் முன்னேறி 34ஆம் இடத்தையும், இலங்கையின் ஹர்ஷிதா சமரவிக்ரமா 8 இடங்கள் முன்னேறி 44ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

மேற்கொண்டு, இலங்கை அணியின் கவிஷா தில்ஹாரி 4 இடங்கள் முன்னேறி 50ஆம் இடத்தையும், விஷ்மி குணரத்னே 22 இடங்கள் முன்னேறி 53ஆம் இடத்தையும், ஹாசினி பெரேரா 13 இடங்கள் முன்னேறி 59ஆம் இடத்தையும், அயர்லாந்தின் ரெபேக்கா ஸ்டாகெல் 25 இடங்கள் முன்னேறி 91ஆவது இடத்தையும் பிடித்து அசத்தியுள்ளனர். அதேசயம் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும் இலங்கை, அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News