அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!

Updated: Fri, Mar 17 2023 19:34 IST
Ireland To Host India For Three Men's T20Is In August; Play Three ODIs Vs Bangladesh In May (Image Source: Google)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இத்தொடர் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து வரும் 31 ஆம் தேதி 16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நடக்கிறது. இந்த தொடர் வரும், மே 28 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. 

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

இதையடுத்து வரும் மே மாதம் நடக்கும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இங்கிலாந்தில் உள்ள செம்ஸ்ஃபோர்டில் நடக்கிறது. ஏற்கனவே வங்கதேச அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், வரும் மே 9, 12 மற்றும் 14 ஆம் தேதிகளில் செம்ஸ்ஃபோர்டில் நடக்கும் வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகளில் அயர்லாந்து 3-0 என்று தோல்வியை தழுவினால், வரும் ஜூன் மாதம் நடக்கும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலகக் கோப்பை குவாலிஃபையரில் மோதும். 

இந்தப் போட்டி வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரையில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்திற்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகளில் அயர்லாந்து அணி  3-0 என்று வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை என்றால், தகுதிச் சுற்றுக்கு செல்லும். தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை