இங்கிலாந்து மகளிர் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்தி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிரையோனி ஸ்மித் - டாமி பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பிரையோனி ஸ்மித் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சரென் ஸ்மேல் 10 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

Advertisement

அதன்பின் அரைசதத்தை நோக்கி விளையாடி வந்த டாமி பியூமண்டும் 40 ரன்களில் நடைடைக் கட்ட, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளில் பைஜ் ஸ்கோல்ஃபீல்ட் 34 ரன்களையும், ஜார்ஜியா ஆடம்ஸ் 23 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்று வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து அணி தரப்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட், அர்லீன் கெல்லி, ஐமி மாகுவேர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து மகளிர் அணியில் ஏமி ஹண்டர் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த கேப்டன் கேபி லூயிஸ் - ஓர்லா பிரெண்டர்காஸ்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேபி லூயிஸ் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் பிரெண்டர்காஸ்டுடன் இணைந்த லியா பாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரை உயர்ந்தது. 

இந்த போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரென்டர்காஸ்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின்னரும் தனது அதிரடியைக் கைவிடாத அவர் 13 பவுண்டரிகளுடன் 80 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாரா ஃபோர்ப்ஸ் 4 ரன்களிலும், ஏவா கன்னிங் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியா பால் 27 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கு வெற்றியையும் தெடிக்கொடுத்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதன்மூலம் அயர்லாந்து மகளிர் அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து அணியானது 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய ஓர்லா பிரெண்டர்காஸ்ட் ஆட்டநாயகி விருதையும், தொடர்நாயகி விருதையும் வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News