லார்ட்ஸ் டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து பிளேயிங் லெவனை கணித்த இர்ஃபான் பதான்!

Updated: Wed, Jul 09 2025 15:09 IST
Image Source: Google

ENG vs IND Test Series: இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நாளை (ஜூலை 10) லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் இருப்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளான. இந்நிலையில் இப்போட்டிக்கான இரு அணிகளின் பிளேயிங் லெவனையும் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார்.

இர்ஃபான் பதான் தனது யூடியூப் சேனலில் ஒரு காணொளியை பதிவேற்றியுள்ளார், அதில் அவர் லார்ட்ஸ் டெஸ்டுக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ளார். அந்தவகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் ​​பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ராவை அணியில் சேர்த்துள்ளார். மேற்கொண்டு அவர் அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

இதுகுறித்து பேசிய அவர்  'இந்தியாவின் விளையாடும் கலவையைப் பார்த்தால், ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருக்க வேண்டும், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக ஜஸ்பிரித் பும்ரா லெவனில் இடம்பிடிக்க வேண்டும். இது தவிர, இந்திய அணி வாஷிங்டன் சுந்தருடன் விளையாடுவதா அல்லது சீமிங் நிலைமைகள் இருந்தால், ஷார்துல் தாக்கூருடன் விளையாடுவதா என்று மட்டுமே யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன். 

இரண்டாவது போட்டியில் வாஷிங்டன் சுந்தர் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார், ஆனால் இங்கிலாந்து சீமிங் நிலைமைகளை வழங்கினால் லார்ட்ஸில் அவரது பந்துவீச்சு வேலை செய்யுமா என்பது கேள்விகுறிதான். அதனால் இது ஒரு கடினமான முடிவாக இருக்கும், நீங்கள் 8ஆவது இடத்தில் இருக்கும் வீரரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஷார்துலை நான் அணியில் சேர்க்க விரும்புகிறேன், ஆனால் இந்திய அணி என்ன செய்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 

அதோசமயம் இப்போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனையும் தேர்வுசெய்துள்ள இர்ஃபான் பதான், அதில் அவர் இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி இப்போட்டில் அவர் ஜோஷ் டோங்கு மற்றும் ஷோயப் பஷீருக்குப் பதிலாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து அணியில் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இர்ஃபான் பதான் தேர்ந்தெடுத்த இந்திய அணி: கே.எல். ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்/ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Also Read: LIVE Cricket Score

இர்ஃபான் பதான் தேர்ந்தெடுத்த இங்கிலாந்து அணி: பென் டக்கெட், ஜாக் க்ரோலி, ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை