உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

Advertisement

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதில் மார்ச் 22ஆம் தேதி தொடங்கு முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

அதனைத்தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி கோப்பையை நழுவவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களுடைய முதல் லீக் போட்டியில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு அணியிலும் இடம்பிடித்துள்ள வீரர்கள் தங்கள் பயிற்சிகளை தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் இளம் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடவுள்ளார். முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த இஷான் கிஷான் ஏலத்திற்கு முன்னதாக அந்த அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் வீரர்கள் மேகா ஏலத்தில் அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.11.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது

இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இஷான் கிஷான் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன் இந்தியா அணியின் அங்கமாக இருந்த இஷான் கிஷான், உள்ளூர் போட்டிகளை தவிர்த்து ஐபிஎல் தொடருக்காக தயாரானதன் காரணமாக, அணியின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இந்திய அணியில் தான் இழந்த இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் இஷான் கிஷான் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். அதன்படி அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ள காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் தனது பயிற்சின் போது சில சிக்ஸர்களை அடிப்பது தெளியாக அந்த காணொளியில் தெரிகிறது. இதனால் இந்த சீசனில் அவர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

ஐபிஎல் தொடரில் இஷான் கிஷனின் ஃபார்ம் சிறப்பாக இருந்துள்ளது. அவர் இதுவரை 105 போட்டிகளில், 135.87 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 16 அரை சதங்கள் உள்பட 2,644 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் தொடக்க வீரராகவே அதிக ரன்களைச் சேர்த்துள்ளார். இருப்பினும் சன்ரைசர்ஸ் அணியில் ஏற்கெனவே டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா தொடக்க வீரர்கள் இடத்தில் இருப்பதால், இஷான் கிஷான் மிடில் ஆர்டர் வீரராகவே களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News