தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்; கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு!

Updated: Sun, Dec 17 2023 17:11 IST
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து இஷான் கிஷன் விலகல்; கேஎஸ் பரத்திற்கு வாய்ப்பு! (Image Source: Google)

இந்திய அணி தற்போதைய தனது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மூன்று கேப்டன்களின் தலைமையில் மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக் கொண்டு, கேஎல் ராகுல் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது.

இதையடுத்து இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. மேலும் விராட் கோலி, கே.எல். ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ், ஷுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். வழக்கம்போல் பந்துவீச்சில் பும்ரா, சமி சிராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலில் காயம் காரணமாக முகமது ஷமி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இவருடைய இடத்திற்கு மாற்று வீரர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான் தனிப்பட்ட காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். அவருக்கு பதிலாக தற்போது தென் ஆப்பிரிக்காவில்  இந்திய 'ஏ' அணி கேப்டனாக இருக்கும் கேஎஸ் பரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ தனது பதிவில், "தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பிசிசிஐயை விடுவிக்குமாறு இஷான் கிஷன் கேட்டுக் கொண்டுள்ளார். விக்கெட் கீப்பர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆடவர் தேர்வுக் குழு கே.எஸ். பரத்தை அவருக்கு மாற்றாக நியமித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை