அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்ஸர் படேல்!

Updated: Fri, Mar 14 2025 11:34 IST
Image Source: Google

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் டெல்லி அணி கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசிய அக்ஸர் படேல், “டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருப்பது எனக்கு மிகவும் பெருமையான தருணம், என் மீது நம்பிக்கை வைத்த எங்கள் உரிமையாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளயாடிய காலத்தில் ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக வளர்ந்துள்ளேன். மேலும் இந்த அணியை முன்னோக்கி வழிநடத்த நான் தயாராக உள்ளேன்.

எங்கள் பயிற்சியாளர்களும் அணி ஊழியர்களும் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்ட ஒரு சமநிலையான மற்றும் வலுவான அணியை ஒன்றிணைப்பதன் மூலம் மெகா ஏலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் ஏராளமான தலைவர்கள் உள்ளனர், இது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது, மேலும் எங்கள் ரசிகர்களின் மகத்தான அன்பு மற்றும் ஆதரவுடன், கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகவும் வெற்றிகரமான சீசனை எதிர்நோக்குவதால், அணியில் சேர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அக்ஸர் படேல் இதுவரை 150 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 3 அரைசதங்களுடன் 1653 ரன்களையும், பந்துவீச்சில் 123 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். முன்னதாக கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் போதே அக்ஸர் படேல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டு வந்தார். இதுதவிர்த்து சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணைக்கேப்டனாகவும் அகஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, ஃபஃப் டு பிளெஸ்சிஸ், முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை