இந்தியா மகளிர் - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய இந்தியா 104.3 ஓவரில் 428 ரன்களில் ஆல் அவுட்டானது. சுபா சதீஷ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யாஸ்திகா பாட்டியா மற்றும் தீப்தி ஷர்மா ஆகிய 4 வீராங்கனைகள் அரைசதமடித்து அசத்தினர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

இங்கிலாந்து சார்பில் லாரன் பெல், எக்லெஸ்டோன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 35.3 ஓவரில் 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

Advertisement

பின் 298 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. இந்திய அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் சார்லி டீன் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 479 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சில் களமிறங்கியது.

இதிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. இந்த படுதோல்விக்கு பின் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட், இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் பேட்டிங் செய்ததை பார்த்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது என கூறினார். 

இதுகுறித்து பேசிய அவர், "இந்தியா அபாரமாக ஆடியது. அவர்கள் முதல் இன்னிங்க்ஸில் விளையாடியதைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அவர்கள் ஆடிய விதத்துக்கு அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவின் இந்த சூழ்நிலைகள் எங்களுக்கு பழக்கமானது அல்ல. எங்களுக்கு இந்த போட்டி நிறைய படிப்பினைகளை கொடுத்துள்ளது. இந்தியாவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News