தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்!

Updated: Thu, Feb 23 2023 19:36 IST
'I've got the next 12 months' - Warner defiant over Test future (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடி வருகிறது. இதில் இந்திய அணி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதில் டெல்லியில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னருக்குக் காயம் ஏற்பட்டது. முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து வார்னர் விலகினார். சிகிச்சைக்காக உடனடியாகக் குடும்பத்தினருடன் சிட்னிக்குத் திரும்பியுள்ள வார்னர், டெஸ்ட் தொடருக்குப் பிறகு நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ள வார்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “2024 வரை நான் விளையாடுவேன் என்று கூறியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் எனக்கு இடமில்லை என தேர்வுக்குழுவினர் கருதினால் அப்படியே இருக்கட்டும். வெள்ளைப் பந்து அணிகளில் இடம்பெற முயல்வேன். அடுத்த ஒரு வருடத்தில் ஏராளமான கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

நான் தொடர்ந்து ரன்கள் குவித்தால் என் இடத்தைத் தக்கவைத்து அணிக்கும் உதவுவேன். 36 வயது வீரரை விமர்சனம் செய்ய விமர்சகர்களுக்கு எளிதாகவே இருக்கும். முன்னாள் வீரர்களுக்கு இப்படி நடந்ததை நான் பார்த்துள்ளேன். நிறைய ரன்கள் எடுத்து அணி வீரர்களுக்கு நான் உதவ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை